வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
பாளையங்கோட்டையில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார் தாழையூத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் லட்சுமணன் (39), குமரேசன் (34) ஆகியோர் கண்ணனின் பாட்டி வீட்டை எழுதி கேட்டு தகராறு செய்தனர். மேலும் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி லட்சுமணன், குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் மே லப்பாளையம் கரீம் நகரை சேர்ந்தவர் முகம்மதுகாஜா மைதீன் என்ற அச்சப்பா (29). இவருடைய நண்பர் ஜான்பால் (30). இவர்கள் 2 பேரும் பீடி காலனி அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பீடி காலனி சேர்ந்த யானை அசன், நவ்ஷாத் ஆகியோர் சேர்ந்து முகம்மது காஜா மைதீன், ஜான்பால் ஆகியோரிடம் தகராறு செய்து தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.