வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு செம்மண்விளையை சேர்ந்தவர் சசிதரன். இவருக்கு சரத்(வயது28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை மஞ்சாலுமூடு அருகே ஜெரின் பிரசாத் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குடும்ப தகராறு காரணமாக சசிதரனின் மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஜெரின் பிரசாத்தின் குழந்தைகள் தற்போது சசிதரன் பராமரிப்பில் உள்ளனர். இந்த நிலையில் சரத்துக்கும் உறவினரான ஜெரின் பிரசாத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சரத் மஞ்சாலுமூடு சந்திப்புக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற ஜெரின் பிரசாத் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து சரத்தை கையாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சரத் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெரின் பிரசாத், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story