இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
புதுசித்தாபுதூர்
கோவை புது சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22), மூர்த்தி (20) ஆகியோர் வந்தனர். அவர்கள் அந்த இளம் பெண்ணிடம், உனது அண்ணண் சஞ்சய் (22) எங்கே என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர் அண்ணன் இங்கு இல்லை என்று கூறினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு, மூர்த்தி ஆகியோர் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம் பெண்ணின் அண்ணன் சஞ்சய்க்கும், சந்துருவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடி சந்துரு, மூர்த்தி ஆகியோர் சஞ்சய் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவருடைய தங்கையை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து சந்துரு, மூர்த்தி மீது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.