அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
x

தேவதானப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தேனி

திருச்சியில் இருந்து குமுளிக்கு கடந்த 15-ந்தேதி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த சுப்பு பஸ்சை ஓட்டி வந்தார். திண்டுக்கல்-குமுளி பைபாஸ் சாலையில் புல்லக்காபட்டி பிரிவு அருகே வந்தபோது மர்மநபர்கள் கல்வீச்சு தாக்குல் நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தேவதானப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து வயது 26) தமிழன் (20) ஆகியோர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story