மண் அள்ளிய 2 பேர் கைது: டிராக்டர் பறிமுதல்


மண் அள்ளிய 2 பேர் கைது:  டிராக்டர் பறிமுதல்
x

கடமலைக்குண்டு அருகே மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

தேனி

கடமலைக்குண்டு போலீசார் நேற்று இரவு நரியூத்து விலக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடும்பாறை பகுதியில் இருந்து வருசநாடு நோக்கி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் டிராக்டரில் அனுமதியின்றி கரம்பை மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டர் உரிமையாளர் பாண்டியராஜன் (வயது 47), டிரைவர் நாகவேல் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story