கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது


கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x

கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று முகுந்தன் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த கமல் (36), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்குமார் (37) ஆகிய 2 பேரும் முகுந்தனின் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடினர். இதுகுறித்து முகுந்தன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கமல், மகேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story