ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது


ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x

ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்காரகுப்பத்தை சேர்ந்தவர் முஜ்மல் (வயது 58). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று ஆண்டிமடம் நான்கு ரோடு அருகே ஆட்டோவுடன் முஜ்மல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் முஜ்மலை மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முஜ்மல் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (29), டி.மங்கலம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (49) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story