வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
கோயம்புத்தூர்
உக்கடம்
கோவை உக்கடம் அன்புநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அமீன் என்கிற இடி அமீன் (வயது 26). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் பஸ்சில் காந்திபுரத்தில் இருந்து உக்கடம் வந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பேர் அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்து ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமீன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பணம் பறித்தது பெரம்பலூரை சேர்ந்த தொழிலாளி கதிரவன் (26), பொள்ளாச்சி அம்பாரம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி புவின்ராஜ் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story