153 கிலோ குட்கா பதுக்கிய 2 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையத்தில் 153 கிலோ குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர்
இடிகரை
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குட்கா விற்ப னை நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள், வெங்கடேஸ்வரலூ நகர் 4-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 153 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருருப்பது தெரியவந்தது.
உடனே அங்கிருந்த ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஞானசுந்தரம் என்பவரின் மகன் பால்கிராஸ்லின் (வயது44), சத்திய நாராயணன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதில் பால் கிராஸ்லின், கடந்த மாதம் ஒரு வீட்டின் அறையை வாடகை்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story