போதையில் நடந்த தகராறில் நண்பரை கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்-2 பேர் கைது


போதையில் நடந்த தகராறில் நண்பரை கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்-2 பேர் கைது
x

சோமாசிப்பாடி கோவில் குளத்தில் பிணமாக கிடந்தவர் மதுபோதையில் நடந்த தகராறில் அவரை நண்பர்களே கொலை செய்து குளத்தில் வீசியது அம்பலமானது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

சோமாசிப்பாடி கோவில் குளத்தில் பிணமாக கிடந்தவர் மதுபோதையில் நடந்த தகராறில் அவரை நண்பர்களே கொலை செய்து குளத்தில் வீசியது அம்பலமானது. இதையடுத்து 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.

குளத்தில் பிணம்

கீழ்பென்னாத்தூரையடுத்த சோமாசிப்பாடியில் உள்ள முருகர் கோவில் குளத்தில் கடந்த 8-ந் தேதி காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். கீழ்பென்னாத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் உள்ள சிறுகொத்தான் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்த பிறகு அவரது நண்பர்களான மோகன் மகன் அறிவுச்செல்வன் (25), சீனிவாசன் மகன் பிரவீன்குமார் (23), பாலு மகன் அசோக்குமார் (30) ஆகிய 3 பேர் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்தியபோது விஜயகுமாருடன் இவர்கள் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்களை போலீசார் தேடிச்சென்றபோது அறிவுச்செல்வன், பிரேம்குமார் ஆகிய 2 பேர் மட்டும் சிக்கினர்.

குளத்தில் வீசினர்

விசாரணையில் கடந்த 7-ந் தேதி 4 பேரும் மது அருந்தியதாகவும், போதையில் நடந்த தகராறில் அசோக்குமாருடன் சேர்ந்து விஜயகுமாரை கத்தியால் காது, வயிறு ஆகிய இடங்களில் குத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தததாகவும் ஒப்புக்கொண்டனர். அதன்பின் கொலையை மறைக்க விஜயகுமாரின் உடலை குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல் தெரியவந்ததையடுத்து அறிவுச்செல்வன் மற்றும் பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்றபின் இருவரையும் போலீசார் கைது செய்து திருவண்ணாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவான அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story