தொழிலாளியை கொன்று கண்மாயில் வீசிய 2 பேர் கைது
அருப்புக்கோட்டை அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொன்று கண்மாயில் வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொன்று கண்மாயில் வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி கொலை
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் செட்டி கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அழுகிய நிலையில் கிடந்தார். இதனை அடுத்து தாலுகா போலீசார் அந்த உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தது கல்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன் (வயது 58) என்பதும், வில்லிபத்திரியில் உள்ள மரக்கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரை கொலை செய்து கண்மாயில் வீசியது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவருடன் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த ஸ்ரீமான் (22), முடியனூரை சேர்ந்த ராகேஷ் (23) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வேல்முருகனை கல்லால் அடித்து கொலை செய்ததும், கண்மாயில் உடலை வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.