அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சரவெடிகள் ஏற்றி சென்ற மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.
தாயில்பட்டி,
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சரவெடிகள் ஏற்றி சென்ற மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.
2 ேபர் கைது
வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் ேபாலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கணஞ்சாம்பட்டி கிழக்கு தெருவில் சண்முக கனி (வயது 38), சின்ன முனியசாமி (42) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு பறிமுதல்
பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தலா 20 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் குகன் பாறையில் இருந்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் வாகனங்களில் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வெம்பக்கோட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட சரவெடிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி வேனை பறிமுதல் செய்த போலீசார் சரவெடிகள் எங்கு தயாரிக்கப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என போலீசார் அந்த வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.