அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் மற்றும் போலீசார் முத்தாட்சிமடம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சந்தேகத்தின் அடிப்படையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த குடோனில் உரிய அனுமதியின்றி ஆட்களை வைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு இருந்த கீழத்திருத்தங்கல் கந்தையா மகன் யோகராஜ் (வயது48), தேவராஜ் (45) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரையொட்டி போலீசாரின் தீவிர கண்காணிப்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் திருத்தங்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் எஸ்.என்.புரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு குழாய் கடையில் அனுமதியின்றி அதேபகுதியை சேர்ந்த ரவிவர்மன் (46) என்பவர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story