அனுமதியின்றி பட்டாசு தயாரித்த பதுக்கிய 2 பேர் கைது


அனுமதியின்றி  பட்டாசு தயாரித்த பதுக்கிய 2 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த, பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் மற்றும் போலீசார் நாரணாபுரம்-ஆண்டியாபுரம் ரோட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகர செட் அமைத்து விஜய்வெங்கடேஷ் (வயது 33) என்பவர் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் விஜய்வெங்கடேசை கைது செய்தனர். இதேபோல் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பழைய வெள்ளையாபுரம் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வள்ளிமுத்து (30) என்பவர் தனது வீட்டில் உரிய அனுமதியின்றி 5 அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து வள்ளிமுத்துவை கைது செய்தனர்.


Related Tags :
Next Story