நகராட்சி அலுவலக ஊழியர் கொலையில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு


நகராட்சி அலுவலக ஊழியர் கொலையில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

செங்கோட்டை நகராட்சி அலுவலக ஊழியர் கொலையில் கைதான 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந்தேதி காலையில் ராஜேஷ் வழக்கம்போல் நகராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரான அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெல்லை தாழையூத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் மந்திரமூர்த்தி (22), நாங்குநேரியை சேர்ந்த சுப்பையா மகன் மாரி (19) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நேற்று காலையில் செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி சுனில்ராஜா உத்தரவிட்டார். இதையடுத்து மந்திரமூர்த்தி, மாரி இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story