விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் நேற்று முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த இளவரச பாண்டியன் (வயது 51), முள்ளக்காடு மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஹரிஹரசுதன் (43) என்பதும், அவர்கள் 2 பேரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ 175 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story