மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது
மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது
கோவை
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்கு கடத்தி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கடத்தல்
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியைசேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம், பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை.இதையடுத்து சிறுமியின் தாய் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்துசிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.
பலாத்காரம்
இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர்சிறுமியை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்துவந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
கைது
மேலும் விசாரணையில், சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார், இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் அரவிந்த் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.