பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது


பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது
x

பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கரூர் வெங்கமேடு பெரிய குளத்துபாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சம்பவத்தன்று காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பசுபதி பாளையத்தை சேர்ந்த சுதாகர் (வயது 25), பழையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (34) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story