தொழிலாளியை மறித்து செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது


தொழிலாளியை மறித்து செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
x

திருவண்ணாமலையில் தொழிலாளியை மறித்து செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொழிலாளியை மறித்து செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 37), தொழிலாளி. திருவண்ணாமலைக்கு வந்த இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வேலூர்- திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் செல்வன் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட செல்வன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

அதில் வழிப்பறியில் ஈடுபட்டது, திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த கந்தன் (26) என்பதும், அவரது நண்பர் பெங்களூருவை சேர்ந்த அன்பழகன் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story