கஞ்சா விற்ற 2 பேர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, போலீசார் கொட்டாரம் விலக்கு அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவன் என்ற கப்பல் பரமசிவன் (வயது 49) மற்றும் சுரேஷ் (40) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
Related Tags :
Next Story