கஞ்சா விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க தூத்துக்குடி மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக பேரூரணியை சேர்ந்த முத்துசுந்தர் (வயது 23), கோரம்பள்ளத்தை சேர்ந்த மாரிசெல்வம் (20) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து தூத்துக்குடி மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story