கஞ்சா விற்ற 2 பேர் கைது
தர்மபுரி
மாரண்டஅள்ளி:-
மாரண்டஅள்ளி அருகே கரிகம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பஸ் நிறுத்தம் அருகே பிளாஸ்டிக் பையுடன் நின்ற நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரிம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கு மணி (வயது40) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற சரவணன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story