கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2  பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2023 12:30 AM IST (Updated: 20 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள பிள்ளைகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிள்ளைக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும், கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ் (வயது 31), வெங்கடேஷ் (23) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story