கஞ்சா விற்ற 2 பேர் கைது
மன்னார்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்.இதன் பகுதியாக மன்னார்குடி சேரங்குளம் மெயின் ரோட்டில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மன்னார்குடி பட்டக்காரர் தெருவை சேர்ந்த குணா என்கிற சற்குணம் (வயது27), நீடாமங்கலத்தை அடுத்த ஆதனூர் மண்டபம் சமத்துவபுரத்தை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (40) என்பதும், இவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story