திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே     கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அந்தோணி குரூஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் வீரட்டகரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெரியாயி கோவில் அருகே நின்று கொண்டு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் உபேந்திரன் (வயது 22) மற்றும் சஞ்சய் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story