கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:15:18+05:30)

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

மயிலாடுதுறை ெரயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதி காவிரிக்கரையைச் சேர்ந்த மைதீன் மகன் முகமது நசீர் (வயது 38) என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நசீரை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அம்மாமணி என்கிற மணிகண்டன் (37) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது நசீர், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story