நாகர்கோவிலில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது


நாகர்கோவிலில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது
x

நாகர்கோவிலில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில், வடசேரி போலீசார் ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக சுங்கான்கடையை சேர்ந்த செல்வகுமார் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுபோல், கோட்டார் போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக தட்டான்விளையை சேர்ந்த ராஜேஷ் (42) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story