கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது


கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் கஞ்சா, மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிச்சி பைபாஸ் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த சொரிமுத்து மகன் தவசி (வயது 38) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் குறிச்சி பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்த சுத்தமல்லி முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவந்திபட்டி போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மதுவிற்றுக்கொண்டு இருந்த மாடன் என்பவர் போலீசாரை பார்த்ததும் மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றார். இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் விட்டுசென்ற 28 மதுபாட்டில்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story