சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இளங்கோ ஆகியோர் தலைமையிலான போலீசார் கொசப்பாடி, புதுப்பாலப்பட்டு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொசப்பாடி கிராமத்தில் தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த சொரிகண்ணன்(வயது 57) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் புதுப்பாலப்பட்டு பகுதியில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(67) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story