மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

வீரபாண்டியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி பகுதியில் மது விற்ற வீரபாண்டி பஜார் தெருவை சேர்ந்த காமேஸ்வர மூர்த்தி (வயது 29), கணேசன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வீரபாண்டி பகுதியில் மது குடிக்க அனுமதித்த அதே பகுதியை சேர்ந்த முத்து (40), கணேசன் (வயது 60) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story