ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது


ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை மற்றும் ஆர்.டி.மலை பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுவதாக தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ஆர்.டி மலை பகுதிக்குச் சென்ற போலீசார் அங்குள்ள பஸ் நிறுத்தத்தின் அருகில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அதுபோல தோகைமலை பஸ் நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடத்திய வேதாச்சலபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (59) என்பவரையும் கைது செய்தனர்.


Next Story