லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

வடமதுரையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேனி மற்றும் போலீசார் கொம்பேரிபட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 47), காடையனூரை சேர்ந்த பழனிசாமி (50) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story