பட்டாபிராமில் போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 பேர் கைது


பட்டாபிராமில் போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 பேர் கைது
x

பட்டாபிராமில் போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பி.ஓ.டி. ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள், பள்ளிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் காவலாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கல்லால் அடிக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பட்டாபிராம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், அந்த வாலிபர்கள் 2 பேரையும் அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள், அங்கிருந்து போகாமல் சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதுடன், அவர் மீது கல்லை எடுத்து வீசினார்.

அந்த கல், போலீஸ் ரோந்து ஜீப் மீது விழுந்ததில், ஜீப்பின் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து போலீசார், போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக விழுப்புரம் சேவியர் காலனியை சேர்ந்த கிருஷ்ணா (வயது 23) மற்றும் பட்டாபிராம் பாரதியார் நகரை சேர்ந்த வல்லப்பதாஸ் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story