ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

நெல்லை அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் சுத்தமல்லி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராயப்பநாடானூரை சேர்ந்த சமுத்திரகனி (வயது 33), ஜெயராஜ் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story