காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில் கரூர் மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் மாயனூர் ெரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த காரில் 10 மூட்டைகளில் தலா 50 கிலோ என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காருடன், ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை சேர்ந்த மகேஷ் (வயது 24), அஜித் (24) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story