டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது


டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது
x

ராதாபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே கும்பிகுளம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்திச் செல்வதாக ராதாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டிராக்டரை மடக்கிப்பிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பிகுளத்தை சேர்ந்த ஜெய்சங்கர், வள்ளியூரை சேர்ந்த முப்புடாதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story