வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x

கோவில் திருவிழா தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் காகிதப்பட்டறை திரவுபதியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20) மற்றும் சதீஷ், பரத் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் திடீரென பரத்தை கீழே தள்ளி விட்டார். அதனால் பரத்தின் நண்பர்கள் சதீஷ், சுபாஷ், மகேஷ் ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த கார்த்திகேயன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கார்த்திகேயனின் தாயார் தேவகி வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து சதீஷ் (19), பரத் (23) ஆகியோரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய சுபாஷ், மகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story