பெண்ணிடம் கைப்பையை திருடிய 2 பேர் கைது
கோவை அருகே பெண்ணிடம் கைப்பையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர்
இடிகரை,
கோவையை அருகே உள்ள மாங்கரை சேர்ந்தவர் செல்வகனி (வயது 37). இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு வருவதற்காக கணுவாயில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் இருந்த கைப்பையை திருச்சியை சேர்ந்த லட்சுமி (35) மீனாட்சி (28) ஆகியோர் திருடினார்கள். அதில் ரூ.970 மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் சாய்பாபாகாலனி போலீசார் அந்த 2 பெண்களையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story