மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது


மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது
x

டாஸ்மாக்கடையில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள செல்லையாபுரத்தில் டாஸ்மாக்கடையில் கடந்த 30-ந் தேதி மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,500 காணாமல் போனதாக விற்பனையாளர் பாபு வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது மதுபாட்டில்களை திருடியது சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்த டேனியல் (வயது 27), பிரதாப் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story