பெண்களிடம் பணத்தை திருடிய 2 பேர் கைது
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பணத்தை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நியூ எல்லீஸ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 28). சம்பவத்தன்று இவர் தீபாவளி பண்டிகைக்காக துணிகள் வாங்க குடும்பத்தினருடன் விளக்குத்தூண் பகுதிக்கு சென்றார். அங்கு துணிகளை வாங்கி கொண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் ஓட்டல் முன்பு காத்திருந்தார். அப்போது அவரிடம் 2 பெண்கள் அவருடைய பர்சை திருட முயன்றனர். அவர்களை ஜெயலட்சுமி பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனகலெட்சுமி (வயது 35), கோவை முத்தணங்குளம் மருதமலை ரோட்டை சேர்ந்த பழனியம்மாள் (56) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அதே பகுதியில் ஆட்டோவில் வந்து இறங்கிய அனுப்பானடியை சேர்ந்த அருள்செல்வியின் பர்சையும் திருடியதாக தெரிவித்தனர். அதில் ரூ.7,500 இருந்தது. இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.