ஜன்னல் கம்பிகளை திருடிய 2 பேர் கைது


ஜன்னல் கம்பிகளை திருடிய 2 பேர் கைது
x

பந்தலூர் அருகே ஜன்னல் கம்பிகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே தேவகிரியில் வசித்து வருபவர் ஷாஜகான். இந்தநிலையில் அவரது பழைய வீட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஷாஜகான் தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஜன்னல் கம்பிகளை திருடியது அம்மன்காவு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 44), விஜயன் (42) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


Next Story