நகை தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது
நகை தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியை சேர்ந்தவர் மணி மகன் விக்னேஷ் (வயது 27), நகை தொழிலாளி. இவர் வடக்கு தெரு அகரம்பாட்டை சந்திப்பு அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வடக்கு தெருவை சேர்ந்த வினோத் (38), கீழ்பெரும்பாக்கம் அபுபக்கர் என்கிற அக்பர்அலி (21), சந்தோஷ் (24) ஆகியோர் அவர்களுக்குள் தகராறு செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அபுபக்கர், டியூப் லைட்டை சாலையில் உடைக்கும்போது விக்னேஷ் மீது பட்டது. இதனால் அவர்கள் 3 பேரிடமும் சென்று விக்னேஷ் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வினோத் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விக்னேசை திட்டி தாக்கி கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வினோத் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அபுபக்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.