கோஷ்டி மோதலில் 2 பேர் கைது


கோஷ்டி மோதலில் 2 பேர் கைது
x

கோஷ்டி மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

கோஷ்டி மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டறம்பள்ளி தாலுகா மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). ஊர் கவுண்டர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு அவரது தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது தரப்பினருடன் செல்வம் வீட்டிற்கு சென்று கோவில் வரவு செலவு கணக்கு மற்றும் நோட்டீசில் ஏன் எங்கள் குடும்பத்தின் பெயர் போடவில்லை என கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தரப்பும் ராஜகோபால் தரப்பும் மோதி கொண்டன. இதில் செல்வம் மற்றும் ராஜகோபால் இருவரும் படுகாயம் அடைந்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜகோபால், கார்த்தி, கோவிந்தராஜ், சாந்தி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

அதேபோன்று ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் செல்வம், முருகன், சரவணன், ராஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜி என்பவரை கைது செய்தனர். படுகாயம் அடைந்த ராஜகோபால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story