மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட மேஸ்திரி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குப்பத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் மேஸ்திரி வேலை செய்ய வந்துள்ளார். பின்னர் வேலை முடித்து பார்க்கும்போது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வெங்கடேசன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்ததார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை போலீசார் மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த விஜய் (வயது 21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வெங்கடேசனுக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவருடன் வந்த வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (19) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. மேலும் 2 மோட்டார்சைக்கிளையும் போலீசார் மீட்டு விஜய் மற்றும் மேகநாதனை கைது செய்தனர்.

1 More update

Next Story