திருட்டு வழக்கில் 2 பேர் கைது


திருட்டு வழக்கில் 2 பேர் கைது
x

பாளையங்கோட்டையில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மகாராஜநகர் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 69). இவர் வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த பணியில் ஈடுபட்ட நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆதிமூலம் (39), வெள்ளாளன்குளத்தை சேர்ந்த ராஜ்கண்ணன் (24) ஆகியோர் சம்பவத்தன்று ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆதிமூலம், ராஜ்கண்ணன் ஆகியோரை கைது செய்தார்.


Next Story