குண்டர் சட்டத்தில்2 பேர் கைது


குண்டர் சட்டத்தில்2  பேர்  கைது
x

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் குழித்துறை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி டெம்போவில் ரேஷன் அரிசி கடத்திய வேளிமலை ஏலானிபொற்றையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு போலீஸ் நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமாரை குண்டா் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து பாளைங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதேபோல திருவட்டார் காஞ்சிமடம் புன்னைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (27). இவர் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து ரதீசை குண்டர் சட்டத்தில் திருவட்டார் போலீசார் நேற்று கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story