327 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
திருமங்கலம் அருகே 327 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47). இவர் வாகைகுளம் பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அறிவழகன் இருக்கும் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அறிவழகனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சின்னச்சாமி என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த 192 மதுபாட்டில்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து சின்னச்சாமியை போலீசார் கைது செய்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story