குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x

வடுவூர் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர்

வடுவூர், ஜூன்.1-

வடுவூர் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் உடையார் தெரு கிராமத்தை சேர்ந்தவா் விஜயகுமார். இவருடைய மகன் மகேந்திரன்(வயது 15).அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் டேனியல்(14). இவர்களில் மகேந்திரன் பத்தாம் வகுப்பும், டேனியல் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர்.

குளத்தில் மூழ்கினர்

மகேந்திரன், டேனியல் உள்பட 6 சிறுவர்கள் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் நீச்சல் அடித்து குளித்த மகேந்திரன், டேனியல் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினர்.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர்.

பரிதாப சாவு

ஆனால் அதற்குள் குளத்தில் மூழ்கிய மகேந்திரன் மற்றும் டேனியல் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த மகேந்திரன், டேனியல் ஆகிய இருவரின் உடல்களையும் அந்த பகுதி மக்கள் மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளத்தில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story