2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன
திருநெல்வேலி
கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெங்கடாசலபுரம் பகுதியில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, 2 மாட்டு வண்டிகளில் 2 பேர் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story