பஸ்கள் மோதல்; கண்ணடி உடைந்தது
பஸ்கள் மோதல்; கண்ணடி உடைந்தது
தாராபுரம்
திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. அந்த வாகனங்களின் போக்குவரத்துக்கு வசதியாக கடந்த சில வருடங்களுக்கு் முன்பு தாராபுரம் பஸ்நிலையம் அருகே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடியில் சர்வீஸ் ரோடு ஒன்று அமைக்கப்பட்டு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்றுவர வழிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் தென்மாவட்டங்கள், கரூர், பழனி போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நுழையும் போது எதிரே சரவீஸ் ரோட்டில் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மோதி் விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பல வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதோடு வாகன ஓட்டிகள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இதுபோன்ற விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படும் முன் தாராபுரம் பஸ்நிலையம் முன்பு பாலத்திற்கு அடியில் செல்லும் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியானது. ஆனால் இதுவரை வேகத்தடை அமைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் பஸ் நிலையம் நுழைவாயில் உள்ளே செல்ல வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதிக்கொண்டது.இதில் அரசு பஸ் முன்பக்கம் கண்ணாடி உடைந்து ரோட்டில் சிதறியது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. எனவே நெடுஞ்சாலை துறையினர் சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தாராபுரம்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.